- ஈரான்
- எங்களுக்கு
- துணை ஜனாதிபதி
- ஜே. டி. வான்ஸ்
- பாக்கிஸ்தான்
- எங்களுக்கு
- துணைத் தலைவர் ஜே. ஜே.
- டி. வான்ஸ்
- ஐக்கிய
- மாநிலங்களில்
- ஐக்கிய மாநிலங்கள்
பாகிஸ்தான்: ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய விடிய நடைபெற்றது. அமெரிக்காவின் அம்சங்களை ஈரான் ஏற்கவில்லை. இரு நாடுகள் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகமலேயே அமெரிக்கா திரும்புகிறோம்
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்கா-ஈரான் இடையேயான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இருதரப்பு அமைதி ஒப்பந்தத்திற்கான ஆலோசனை நடத்தியது. 47 ஆண்டுகால வரலாற்றில் அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த முதல் நேரடி பேச்சுவார்த்தை இது என்பதால் சர்வதேச அளவில் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்தன. இப்போரால் வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2 வார கால போர் நிறுத்தம் மேற்கொள்ள கடந்த 8ம் தேதி இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த 2 வார காலத்தில், மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவும், ஈரானும் முடிவு செய்தன. இதன்படி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருதரப்பு அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஈரான் தரப்பில் 10 அம்ச நிபந்தனைகளும், அமெரிக்கா தரப்பில் 15 அம்ச கோரிக்கைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பாக இருதரப்பிலும் காரசார கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பாகிஸ்தானில் விடிய விடிய நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையேயான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சுமார் 21 மணி நேரமாக பல கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், நாடு திரும்ப உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்துள்ளார். எங்களின் நிபந்தைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டாகவும், ஈரானுக்கே இது பெரிய கெட்ட செய்தி என்றும் பேச்சு.
அமெரிக்காவின் நிபந்தனைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம், ஆனால் அவற்றை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதற்கான எவ்வித உறுதிப்பாட்டையும் அவர்கள் வழங்கவில்லை. நாங்கள் நாடு திரும்ப முடிவெடுத்துள்ளோம். ஈரானுக்கு ஒரு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளோம். அதை அவர்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்”
