×

திருத்துறைப்பூண்டியில் 1,412 வாக்குசாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு

திருத்துறைப்பூண்டி,ஏப்.12: திருத்துறைப்பூண்டியில் 1,412 வாக்குசாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1412 வாக்குசாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முகாமில் தேர்தல் பணிகள் குறித்தும் வாக்கு இயந்திரங்களை எப்படி கையாளுவது என்பது குறித்தும் 30 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

நடைபெற்ற பயிற்சியை தேர்தல் பொது மேற்பார்வையாளர் அனுபமா, மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வபாண்டி, வட்டாச்சியர்கள் செந்தில்குமார், கிருஷ்ணகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் சிரஞ்சீவி ராஜா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

 

Tags : Thiruthuraipoondi ,Thooya Anthony Matriculation Higher Secondary School ,Thiruvarur ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...