×

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாகன சோதனை

திருத்துறைப்பூண்டி,ஏப்.12: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கபட்டு 8 மணி நேரத்துக்கு சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் பணம், நகை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொருக்கை சோதனை சாவடி, நாகை பைபாஸ், வேதை பைபாஸ், வேளூர் பாலம், கச்சனம், உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Tiruthuraipoondi assembly ,Tiruthuraipoondi ,Election Commission ,Tamil Nadu ,Thiruvarur… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...