×

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ.1.83 லட்சம் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி,ஏப்.12: திருத்துறைப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1. லட்சத்து 83 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கடைத்தெரு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகன வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.51 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதேபோன்று கோபாலசமுத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.61,600 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று நாச்சிகுளம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி ரூ.70 ஆயிரத்து 450 எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. பறிமுதல் செய்த பணத்தை கண்காணிப்பு குழுவினர் திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அவர்களிடம் ஒப்படைத்தனர். மொத்தம் ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Redutharapundi ,Rutharapundi ,Duthrapundi ,Kachanam shopahatheru ,Thiruthurapundi, Thiruvarur district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...