×

மன்னம்பந்தலில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை, ஏப்.12: மயிலாடுதுறை தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும்ப டையினர் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. மயிலாடுதுறை, தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்ப தையும், பரிசுகள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் 9பறக்கும் படை களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர மாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஊராட்சியில் வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நிலையான கண்காணிப்பு குழுவினரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

Tags : Manmanbandhal ,Mayiladuthurai ,Tamil Nadu Assembly elections ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...