×

அமெரிக்காவில் ஹைதி நாட்டவரின் கொலை வீடியோவை பகிர்ந்த டிரம்ப்: குடியேறிகள் குற்றவாளிகளா?

மியாமி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை கடுமையான முறையில் நாடு கடத்தி வருகிறது அதிபர் டிரம்ப் நிர்வாகம். இந்நிலையில், புளோரிடா மாகாணம் மியாமியில் உள்ள போர் மயர்சிலில் கடந்த 2ம் தேதி பெட்ரோல் பங்க் ஒன்றில் 40 வயதான ஹைதி நாட்டை சேர்ந்த ரோல்பர்ட் ஜோச்சின் என்பவர் 2 மகள்களுக்கு தாயான வங்கதேசத்தை சேர்ந்த 51 வயது பெண்ணை சுத்தியலால் அடித்து படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பான வீடியோவை அதிபர் டிரம்ப் தனது ஊடகத்தில் பகிர்ந்து, ‘‘நீங்கள் இதுவரை பார்த்திராத மிகவும் கொடூரமான காட்சிகளில் ஒன்றாகும்’’ எனக் கூறி கொலையாளியை மிருகம் என விமர்சித்துள்ளார். இதன் மூலம் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். ஒரு தனி நபரின் செயலை வைத்து அனைத்து குடியேறிகளையும் அநியாயமாக குற்றவாளிகளாக சித்தரிப்பது மிகவும் கொடூரமானது என சமூக ஆர்வலர்கள் டிரம்பை விமர்சித்துள்ளனர்.

Tags : Trump ,United States ,Miami ,President ,Battle Myersill ,Miami, Florida ,
× RELATED ஈரான் உடனான 21 மணி நேர...