×

இலங்கையில் முதியோர் எண்ணிக்கை 18% உயர்வு

கொழும்பு: இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளில் முதியோர் மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்து 18 சதவீதத்தை எட்டியுள்ளது. இலங்கையில் கடந்த 2024ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 17 லட்சத்து 81,800 ஆக உள்ளது. நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 நபர்கள் என்ற அளவில் உள்ளது. முதியோர் மக்கள் தொகை 1981ம் ஆண்டில் 6.6சதவீதமாக இருந்த நிலையில், 2024ம் ஆண்டிற்குள் அது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

1981ம் ஆண்டு இலங்கையின் மொத்த முதியோர் மக்கள் தொகை பத்து லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையானது 39,21,124ஆக உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான இந்த தரவுகள் ஒரு முதுமையடையும் சமூகத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தற்போது முதியோர் மக்கள் தொகை(60வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சிறுவர்கள்(0-14வயதுடையவர்கள்) 20.7சதவீதமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் முதுமையடைதல் குறியீடு 87ஆக இருப்பதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு 100 சிறுவர்களுக்கும் 87 முதியவர்கள் உள்ளனர் என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.

Tags : Sri Lanka ,Colombo ,
× RELATED ஈரான் உடனான 21 மணி நேர...