×

களக்காட்டில் காரில் கொண்டு சென்ற அதிமுக துண்டு பிரசுரங்கள் ஸ்டிக்கர்கள் பறிமுதல்

களக்காடு,ஏப்.12: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு ெபாருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று களக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சூரங்குடியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் அனுமதியின்றி அதிமுகவின் 1000 துண்டு பிரசுரங்கள், 186 ஸ்டிக்கர்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags : AIADMK ,Kalakkad ,Flying Squad ,Permanent Surveillance Team ,Nanguneri ,Election Flying Squad ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...