சுரண்டை,ஏப்.12: சுரண்டை அடுத்துள்ள சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அரசு ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் ஐந்து பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு நடந்துள்ளது. தென்காசி மாவட்டம், சுரண்டையை அடுத்துள்ள சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்-அமுதா தம்பதியினர். இருவரும் சாம்பவர்வடகரையில் அரசு பள்ளியில் ஆசியராக பணியாற்றி வருகின்றனர். நேற்று வேலைக்கு சென்றவுடன் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்ட பகலிலேயே கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம், வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும் வீட்டில் உள்ள ஷோபா, மெத்தை போன்ற பொருட்களை ஆயுதங்களால் கிழித்தும் வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளனர். வேலை முடிந்து மாலை 4 மணி அளவில் வீடு திரும்பிய ஆசிரியர் தம்பதியினர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சாம்பவர்வடகரை போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
