புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடி மையத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் (31) கைது செய்யப்பட்டார். தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்டதாக போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
