திருத்துறைப்பூண்டி,ஏப்.11: நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி பெற்றோர்களையும் மாணவர்களையும் வரவேற்றார். பிரைட் பீப்புள் டிரஸ்ட் நிறுவனர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசுகையில், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் உள்ளன.
தரமான ஆசிரியர்கள், பயிற்றுவிக்கின்றனர், தரமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்றது. மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து அவர்களை மாவட்ட மாநில அளவில் போட்டிகளில் பங்கு பெறச் செய்து வெற்றி பெறவும் செய்கின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களது எதிர்காலம் சிறக்க முன் வாருங்கள் என்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.
