×

கரியாபட்டினத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என பேனர்

வேதாரண்யம், ஏப்.11: கரியாபட்டினத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று கிராமமக்கள் வைத்துள்ள விளம்பர பேனர் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினத்தில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், ஓட்டுக்கு பணம் பெறுவதை அவமானமாக கருதுவோம், உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம். சரியாக பயன்படுத்துவீர் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பேனர் அனைவருக்கும் கவனத்தையும் கவர்ந்து உள்ளது

 

Tags : Kariyapattinam ,Vedaranyam ,Vedaranyam taluka ,Nagapattinam district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...