மதுரா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் முக்த்சாரைச் சேர்ந்த சுமார் 150 யாத்திரீகர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவினர் நேற்று உபி மாநிலம் மதுராவுக்கு வந்தனர். அவர்கள் மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் படகு சவாரி செய்தனர். நேற்று மதியம் பிருந்தாவனில் உள்ள யமுனை நதியில் படகு சென்று கொண்டு இருந்த போது திடீரென கவிழ்ந்தது.
இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போய் உள்ளனர். இதுவரை 16 முதல் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

