- ஐயா
- பாஜக
- லக்னோ
- உத்திரப்பிரதேசம்
- பீகார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- மேற்கு வங்கம்
- அசாம்
- புதுச்சேரி…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 84 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13.39 கோடியாக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், உத்தரபிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு காலஅவகாச நீட்டிப்புகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 5ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வௌியிட்டது. அப்போது, 12 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 25 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மேலும், 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 18.70 சதவீதம் இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா வௌியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நவ்தீப் ரின்வா, “உத்தரபிரதேசத்தில் 2025 அக்டோபர் 27 முதல் 2026 ஏப்ரல் 10 வரை மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்கள், 403 பேரவை தொகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளை உள்ளடக்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடத்தப்பட்டது. ஜனவரி 6 2026 வௌியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6.88 கோடி ஆண் வாக்காளர்கள், 5.67 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 4,119 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12,55,56,025 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 18-19 வயதுக்குள்பட்டவர்களின் எண்ணிக்கை 3,33,981 ஆகவும், பாலின விகிதம் 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 824 பெண் வாக்காளர்களும் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி(நேற்று) வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,39,84,792. இதில் ஆண் வாக்காளர்கள் 7,30,71,071(சுமார் 54%), பெண் வாக்காளர்கள் 6,09,09,525(45.46%) மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4,206(0.01 சதவீதத்துக்கும் குறைவு). இதன்படி 18-19 வயதுக்குள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,63,360ஆக உயர்ந்துள்ளது.
இது மொத்த வாக்காளர்களில் 1.32 சதவீதமாகும். பாலின விகிதமும் 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 834 பெண் வாக்காளர்களாக அதிகரித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 84,28,767ஆக உயர்ந்துள்ளது. இதில் 42,27,902 ஆண் வாக்காளர்கள். 42,00,778 பெண் வாக்காளர்கள் மற்றும் 87 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அதிகரித்துள்ளனர். மேலும், 18-19 வயதுக்குள்பட்ட பிரிவினர் 14,29,379 வாக்காளர்களாக உயர்ந்துள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,29,421ஆகவும், லக்னோவில் 2,85,961 ஆகவும், பரேலியில் 2,57,000 ஆகவும், காசியாபாத்தில் 2,43,666 ஆகவும், ஜான்பூரில் 2,37,590 ஆகவும் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்” என்று தெரிவித்தார். பாஜ ஆளாத தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பல லட்ச கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பாஜ ஆளும் உத்தரபிரதேசத்தில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு வாக்காளர்கள் எண்ணிக்கை பல லட்சம் உயர்ந்துள்ளது பாஜவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.

