×

சுற்றுலா பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் தோட்டம்பாறையை சேர்ந்தவர் நவுஷாத் (52), ஆட்டோ டிரைவர். இவருக்கு நபீஷாகுட்டி என்ற மனைவி, முகமது நிஷாத் என்ற மகன், நிஷானா என்ற மகள் உள்ளனர். இவர் நேற்று மதியம் வாக்குப்பதிவு செய்துவிட்டு ஒலவக்கோட்டிலிருந்து முட்டிக்குளங்கரை நோக்கி வீட்டிற்கு தனது ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். முண்டூரிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த தனியார் சுற்றுலா பஸ் பாலக்காடு- கோழிக்கோடு சாலை புதுப்பரியாரம் கூட்டுறவு வங்கி அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆட்டோ டிரைவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாலக்காடு ஹேமாம்பிகாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Palakkad ,Naushad ,Thottamparai ,Nabeeshakutty ,Mohammed Nishad ,Nishana ,Olavakkode ,Muttikulangarai ,
× RELATED காசியாபாத் சிறுமியை வன்கொடுமை வழக்கு:...