×

தவெக ஒரு விபத்து கட்சி; ரஜினி, அஜித்தை தவிர வேறு யாரும் மக்களை கவரவில்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை குன்றத்தூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சடமாக செயல்படாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழக தலைமை செயலாளர் உள்பட பல்வேறு நேர்மையான அரசு அதிகாரிகளின் மாற்றம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி.

அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும். தங்களின் பிள்ளைகள் மற்றும் இளைய தலைமுறையினரை விபத்தில் சிக்காமல் பெற்றோர்தான் பாதுகாக்க வேண்டும்.பிரபல நடிகர்கள் சாலையில் இறங்கி நடந்து சென்றால்கூட, அவர்களை பின்தொடர்ந்து நடந்து செல்வதற்கு ஏராளமான இளைஞர்கள் விரும்புவர். யாரோ ஒருவர், அவர்களை தவறான வழியில் வழி நடத்திச் செல்கிறார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Takeka ,Rajini ,Ajit ,Chennai ,Secular Progressive Alliance ,Dimuka ,Bhudur Constituency Congress ,Selvapperundagai Kunratur ,Tamil Nadu ,
× RELATED விஜய்யை விட்டுவிட்டு அஜித்தை கையில்...