×

ஒன்றிய அரசின் எடுபிடியான தேர்தல் ஆணையம்: வைகோ காட்டம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாழ்படுத்தியது மோடி அரசு, அதற்கான நிதியையும் தடுத்து நிறுத்தியது. இப்போது 100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்திப் தரப் போவதாக பொய் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் எடுபடியாக மாறிவிட்டது. தலைமை செயலாளர் மாற்றிவிட்டு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனி செயலாளராக இருந்தவரை தலைமை செயலாளர் அறிவிப்பது பாரபட்சம் மட்டும் இன்றி, ஒரு சார்பு ஆதரவு செயல்படுவதற்காக இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் செய்து இருகின்றது.

முதல்வர் வாகனம் சோதனை செய்யப்பட்டது. யார் காரில் சென்றாலும் சோதனை செய்யலாம் அது சரி? என்றால் மோடி செல்லும் காரில் சோதனை செய்வீர்களா? அமித்ஷா வாகனத்தை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தை அழித்துவிடுவேன் என்று அமித்ஷா சொல்லலாமா? தமிழர்கள் தமிழ்நாட்டு நலனுக்காக தமிழர்கள் நலனுக்காக அண்ணா தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தை அழிப்போம் என்று செல்வதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும். இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : Union government ,Election Commission ,Vaiko ,Modakkurichi ,MDMK ,general secretary ,Modi government ,
× RELATED விஜய்யை விட்டுவிட்டு அஜித்தை கையில்...