×

தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது மகனும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு!!

சென்னை: ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்கமுயன்ற மகனும் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை திலகர் நகரை சேர்ந்த வேணுகோபால் கடந்த 2023ல் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு நவ. 11ம் தேதி அவரது மகன் கிஷோர் குமாருக்கு வேலை கிடைத்தது. திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நேற்று வேலைக்கு செல்லும்போது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Venugopal ,Thilagar city, Chennai ,
× RELATED ராணிப்பேட்டை அருகே சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!!