காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றார். ஏற்கனவே சென்னையில் வில்லிவாக்கம் உள்பட சில இடங்களில் விஜய் மேற்கொள்ள இருந்த பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டது. காரைக்குடியில் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. விஜய்க்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், பரப்புரை மேற்கொள்ளாமலேயே திரும்பிச் சென்றார். 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த தொண்டர்கள், விஜய் பரப்புரை மேற்கொள்ளாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் சில இடங்களில் விஜய் மேற்கொள்ள இருந்த பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டது. பரப்புரை பயணத்தை தொடர்ந்து ரத்து செய்து வரும் விஜய், தற்போது கூட்டத்திற்கு வந்தும் பரப்புரை செய்யாததால் தொண்டர்கள் ஏமாற்றம். விஜய்யை காண வந்த பிரியா என்ற பெண் வெயில் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய்யின் பரப்புரை வாகனத்தில் ரசிகர்களைப் போலவே காரைக்குடி வேட்பாளர் பிரபு ஏறினார்.
விஜய்யின் வாகனத்தில் ஏறிய ரசிகர்களின் கைகளை பவுன்சர்கள் பூட்ஸ் கால்களால் உதைத்தனர். விஜய்யை காண வந்த தவெக தொண்டர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். விஜய் பரப்புரையில் 3 பேர் வெயிலில் மயக்கமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 3 மணி நேரமாக தொண்டர்கள் காத்திருந்தபோதும் காரைக்குடி வந்தபோது விஜய் சைக்கிள் ஓட்டியதால் பரப்புரையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
