×

திருத்துறைபூண்டி பெருமாள் கோயிலில் 16 அடி ஆஞ்சநேயர் பிரதிஷ்டைதினம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.10: திருத்துறைப்பூண்டி அபிஷ்டவரதராஜ பெருமாள் கோயிலில் 16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத அபிஷ்டவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் தமிழ்நாட்டில் மூன்றாம் இடத்தில் உள்ள 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் அருள் பாவிக்கிறார்.

இந்த ஆலயத்தில் அமாவாசை மற்றும் அனுமத் ஜெயந்தி மற்றும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் 16 அடி உயர ஆஞ்சநேயர் (பிரதிஷ்டா தினம்) நிலை நிறுத்திய தினத்தை முன்னிட்டு மதியம் சிறப்பு ஹோமமும் பால்குட அபிஷேகமும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெண்ணெய் காப்பு அலங்காரமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சதீஷ் மற்றும் தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன், துணை பட்டாச்சாரியார் ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்தனர்.

 

Tags : -foot Anjaneyar installation day ,Thiruthuraipoondi Perumal Temple ,Thiruthuraipoondi ,Thiruthuraipoondi Abishtavaratharaja Perumal Temple ,-foot ,Vishwaroopa ,Vairakiya Anjaneyar ,Sridevi Bhoodevi ,Sametha Abishtavaratharaja Perumal Temple ,Thiruthuraipoondi, Thiruvarur district.… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...