×

சம்சாவில் பல்லி- 3 பேருக்கு வாந்தி மயக்கம்

முத்துப்பேட்டை, ஏப். 10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் நாடார் தெருவில் வசிக்கும் சேகர்(36), நீலகண்டன்(21), அசோக்(20) ஆகிய கட்டிட தொழிலாளர்கள் 3 பேரும் கடைத்தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் டீ சாப்பிட சென்றுள்ளனர். டீக்கடைக்கு சென்று மூன்று பேரும் சம்சா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஒருவர் சாப்பிட்ட சம்சாவில் முழு பல்லி உள்ளே வெந்த நிலையில் இருந்ததை கண்டு மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடைக்காரரிடம் மூவரும் கேட்டபோது முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Samsavil ,Pally ,Muthupettai ,Shekhar ,Neelakandan ,Ashok ,Nadar Street ,Nachikulam ,Udayamarthandapuram ,Muthupettai, Tiruvarur district ,Kaday Street ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...