தூத்துக்குடி, ஏப். 10: தூத்துக்குடியில் 50 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி டவுன் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி கீழ சண்முகபுரம் 1வது தெருவை சேர்ந்த வன்னியராஜ் (52) என்பவர் பைக்கில் புகையிலை விற்றது தெரிய வந்தது. அவரை சுற்றி வளைத்த போலீசார், அவரிடமிருந்து 50 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்த போலீசார், வன்னியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
