×

நான்கு மாதங்களில் 6 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா.!!

கடந்த 2 நாட்களாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை செய்து வருவதாக தென் கொரிய ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது. பதற்றத்தை தனிப்பதற்கான சியோலின் நம்பிக்கைகளை வடகொரியாவின் இந்த தொடர் சோதனைகள் சிதைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பை நோக்கி Wonsan பகுதியில் இருந்து கூடுதலாக அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஏவியதாக தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக வடகொரியா அதே பகுதிக்கு அருகில் இருந்து அடையாளம் தெரியாத பல் குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியதாக கூட்டுப்படை தலைமை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணைகள் சுமார் 240 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி வருவதாகவும், கடந்த செவ்வாய் அன்று பியாங்கியாங்கிற்கு அருகில் இருந்து சந்தேகத்திற்கிடமான Ballistic ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்ததகவும் தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

தென் கொரியாவின் மாளிகையான ப்ளூஹவுஸ் அவசர தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியதாகவும், முந்தைய ஏவுகணை சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீமானங்களை மீறும் செயல் என்று குறிப்பிட்டதோடு, இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியதாக தென் கொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கடலில் விழுந்ததாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

தனது பிராந்திய கடல் எல்லைக்குள் அல்லது பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் எந்த ஏவுகணைகளும் நுழையவில்லை என டோக்கியோ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 60 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வடகொரியாவின் ஏவுகணை திட்டத்திற்கு எதிரான ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை இதுபோன்ற சோதனைகள் மீறுவதால் வடகொரியாவின் Ballistic ஏவுகணைகள் குறித்த தகவல்களை தென்கொரியா உடனடியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags : North Korea ,Seoul ,
× RELATED மத்திய கிழக்கு வான்வெளிக்குத் தடை;...