×

டாமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி: விவசாயிகள் மும்முரம்

நீடாமங்கலம்,ஏப்.9: நீடாமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் கடந்த தாளடி சாகுபடியில் 33,000 ஏக்கரில் தாளடி பணியை முடித்தனர்.

அதன்பிறகு தற்போது நாற்றங்காலை சீர் செய்து நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் கோடை சாகுபடியை சித்தமல்லி, மரப்பனாமேடு, ஆதனூர், பூவனூர், காளாச்சேரி, ராயபுரம், பெரம்பூர், ரிஷியூர், வடகாரவயல், தென்காரவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன் பட்டம், பின்பட்டம் என விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

முன் பட்டத்தில் விவசாய பணியை தொடங்கிய விவசாயிகள் தற்போது நாற்று பறித்து நடவு செய்து களை எடுக்கும் பணியிலும், உரமிடும் பணியிலும் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தற்போது நாற்றங்காலில் விதை விட்டும், பாய் நாற்றங்கால் அமைத்தும் நடவு பணிக்கு தயாராகி வருகின்றனர். சில இடங்களில் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : TAMANGALAM REGION ,THREOMURAM ,NEEDAMANGALAM, AP.9 ,NEEDAMANGALAM AREA ,Needamangalam Agricultural Kota ,Thiruvarur district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...