திருவாரூர்,ஏப். 9: திருவாரூர் மாவட்டகலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்1, 2 மற்றும் 3, 3ஏ, 3ஏஏ மற்றும் 11 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்த்திற்கும் வரும் 21ந் தேதி காலை 10 மணி முதல் 23ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் விடுமுறைதினமாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விடுமுறை நாட்களில் மேற்படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல் உரிமம் பெற்ற மதுக்கூடங்களையும் மூட வேண்டும் எனவும், மேற்படி தினங்களில் மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது எனவும், இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன் எப்.எல் உரிமம் பெற்ற மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுகூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்தல் மற்றும் உரிமங்களை ரத்துசெய்தல் மற்றும் உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
