திருத்துறைப்பூண்டி,ஏப்.9: திருத்துறைப்பூண்டி நகராட்சி 10வது வார்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி அரியலூர் 10வது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சத்தில் புதிய கட்டிடம் பணி முடிக்கபட்டது. இந்த கடையில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
ரேஷன் கடை துவங்கி காலத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள தெற்கு வீதி ரேஷன் கடையில் மழை வெய்யில் என்று பாராமல் பொருள் வாங்கி வந்தனர். இவர்களது சிரமத்தை போக்கும் வகையில் 200 குடும்ப அட்டை பயன்பெரும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் நகர்மன்ற தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இனி அலச்சல் இல்லாமல் பொருள் வாங்கி கொள்ளலாம். இதற்கு பொது மக்கள் திராவிட மடல் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
