- பெரம்பலூர்
- அரியலூர் ஏலந்தா உயர்நிலைப்பள்ளி
- அரியலூர் தொகுதி
- தமரை எஸ். ராஜேந்திரன்
- அரியலூர்
- எலாண்டா உயர்நிலையம்
- அரியலூர் மாவட்டம்
- Thirumanur
- ஐலாண்டா உயர்நிலைப்பள்ள
- நாயதா நல்லூர்
- தம்ராய் எஸ். ராஜேந்திரனாய்
அரியலூர்,ஏப்.9: அரியலூர் தொகுதி இலந்தை கூடம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த இலந்தைக் கூடம் மற்றும் பொய்யாத நல்லூர் கிராமத்தில், அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அரசு தலைமைக் கொறடாவாக இருந்த அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன், தனது பதவிக் காலத்தில் அரியலூர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று தான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. எதிர்காலம் செழிக்க, குழந்தைகள் நல்லமுறையில் பயில இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து தாமரை எஸ்.ராஜேந்திரனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்.
