×

12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி, ஏப். 9: துவரங்குறிச்சி அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு அருகில் உள்ள களுவன்குளம் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் நிலை அலுவலர் மனோகர் மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பின் பாம்பு பிடிப்பான் உதவியுடன் மலைப்பாம்பு லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Dhuvarankurichi ,Kaluvankulam ,Valanadu ,Dhuvarankurichi, Trichy district ,Dhuvarankurichi fire brigade… ,
× RELATED தோகைமலை பகுதியில் 24 மணிநேரமும் தீவிர வாகன தணிக்கை