×

காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல் தேர்தல் நிலைகண்காணிப்பு குழு அதிரடி பள்ளிகொண்டா டோல்கேட்டில்

அணைக்கட்டு, ஏப். 9: அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு பி 1 குழுவினர் நேற்று காலை பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா என ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலூர் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் ரூ.1லட்சத்து 90 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை காரில் இருந்தவர்கள் பெங்களூரில் இருந்து வருவதாகவும் சொந்த உபயோகத்திற்காக பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இருப்பினும் அவர்களிடம் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி அந்த பணத்தை பறிமுதல் செய்த குழுவினர் அதை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் மஞ்சுநாதனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதற்கான உரிய ஆவணம் காண்பித்தால் பணம் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.

Tags : Election Monitoring Team ,Pallikonda Tollgate ,Anikuttu ,Anikuttu Assembly Constituency Election Monitoring Team ,B1 ,
× RELATED போலி பட்டா தயாரித்து ரூ.25 லட்சம் கடன்...