×

வேலூரில் 50 மதுபாட்டில் பதுக்கியவர் கைது

வேலூர், ஏப்.8: வேலூரில் 50 மதுபாட்டில் பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில் தெருவில் டாஸ்மாக் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (52) என்பவர் வீட்டில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுந்தரமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags : Vellore ,Vellore South Police ,Tasmac ,Uthiramatha Koil Street ,Vellore Old Town.… ,
× RELATED போலி பட்டா தயாரித்து ரூ.25 லட்சம் கடன்...