×

மேற்குவங்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.2000 அரசு பேருந்தில் இலவசம்

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் கார்கே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
* அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ. 2,000 நிதியுதவி, முதுகலை நிலை வரை இலவசக் கல்வி மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.
* விளிம்புநிலை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 நிதியுதவியும், விவசாயத் தொழிலில் ஈடுபடுவோருக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரமும் வழங்கப்படும்.
* காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களையும் ஓராண்டுக்குள் இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : West Bengal Congress ,Kolkata ,Congress ,West Bengal assembly elections ,Kharge ,
× RELATED 16 ஆண்டுகளாக தலைமைறைவாக இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி கைது