×

உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ.54 ஆயிரம் பறிமுதல் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில்

வேலூர், ஏப்.7: காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் பணம், பரிசு பொருட்களை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள மாநில எல்லையில் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.54,600 இருந்தது. விசாரணையில், காரில் இருந்த நபர் தெலங்கானா மாநிலம் ஐதரபாத் பகுதியைச் சேர்ந்த அரிபிரசாத் என்பதும், திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் ரூ.54 ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்து காட்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தரிடம், நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.

Tags : Christianpet, Katpadi ,Vellore ,Katpadi ,Tamil Nadu assembly ,
× RELATED காட்டு பன்றி இறைச்சியை வெட்டிய தந்தை, 2...