×

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தேர்தல் நாளன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணிபுரியும்

வேலூர், ஏப்.5: தேர்தல் நாளன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற பொதுத் தேர்தல் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதி மற்றும் மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக வரும் 23ம் தேதியும், 2ம் கட்டமாக 29ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒட்டுப்பதிவு தினத்தன்று அனைத்து கடைகள் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் தினத்தன்று நேரில் சென்று வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் அந்தந்த தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு இது தொடர்பான புகார்களை ஏப்ரல் 8ம் தேதியே தேர்தல் கமிஷனின் 1950 என்ற புகார் எண் அல்லது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட பொறுப்பு அலுவலர், வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) லிங்கேஸ்வரன் 8778619552 என்ற எண்ணிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் பிரகாஷ் 9566121182 என்ற எண்ணிலும், முத்திரை ஆய்வாளர் கஜேந்திரபாபு அவர்களை 8220822004 என்ற எண்ணிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு அலுவலர் ராணிப்பேட்டை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) தாமரைமணாளன் 9952080800 என்ற எண்ணிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் ராஜகோபால் 9789948409 என்ற எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி 9943069609 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Assistant Commissioner ,Labour ,Vellore ,Ranipet ,Assistant Commissioner of Labour ,Assistant Commissioner of Labour (Implementation) ,Lingeswaran ,Legislative Assembly General… ,
× RELATED செல்போன் பறித்த இரு சிறுவர்கள் உட்பட 4...