×

பவித்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவு

சேந்தமங்கலம், ஏப்.7: எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டி பகுதிகளில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரு ஆட்டுச் சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை, உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்ட பகுதியான பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர், கோணங்கிப்பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், ஆங்காங்கே பறக்கும் படை சோதனைகள் நடைபெற்று வருவதால், வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று கூடிய சந்தையில் வளர்ப்பு ஆடுகள், கிடாக்கள், நாட்டுக்கோழிகள் என அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஆடுகள், கிடாக்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இறைச்சி ஆடுகளை வாங்க வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைவான வந்திருந்தனர். இதனால், ஆடுகள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. சுற்றுபகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து குறைவான வியாபாரிகள் வந்திருந்தனர். கோழிகள் ரூ.1 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ரூ.26 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Pavithram ,Senthamangalam ,Sevvanthipatti ,Erumapatti ,Erode ,Kangeyam ,Tiruppur ,Musiri ,Thuraiyur ,Uppiliyapuram ,Pachaimalai ,Coimbatore ,Kollimalai ,
× RELATED துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பு