பள்ளிபாளையம், ஏப்.6: குமாரபாளையம் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முகாமிட்டுள்ள துணை ராணுவபடையினர் பள்ளிபாளையத்தில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக 150 துணை ராணுவ படையினர் குமாரபாளையம் வந்துள்ளனர்.
தனியார் கல்லூரியில் முகாமிட்டுள்ள இந்த படையினர் நேற்று பள்ளிபாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு அணிவகுப்பு நடத்தினர். சந்தைபேட்டையிலிருந்து சாலையில் அணிவகுத்து வந்த இவர்கள் ஒட்டமெத்தை, நகராட்சி அலுவலகம் வழியாக நான்கு சாலை சந்திப்பு வரை அணிவகுத்து வந்தனர். அணிவகுப்பில் பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் உள்ளூர் போலீசார் பங்கேற்றனர்.
