×

ஈரான் போரால் அமெரிக்காவிலும் பாதிப்பு ஆரம்பம்

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், அமெரிக்காவிலும் அதன் பாதிப்புகள் உணரத் தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு 4.09 டாலராக அதிகரித்துள்ளது. இது போருக்கு முன் இருந்ததை விட ஒரு டாலருக்கும் அதிகமாகும். டீசல் விலை ஒரு கேலனுக்கு 3.64 டாலரில் இருந்து 5.53 டாலராக அதிகரித்துள்ளது.

இதனால் முன்னணி இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் வரும் 17ம் தேதி முதல் 3ம் தரப்பு விற்பனையாளர்கள் மீது 3.5 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக அறிவித்துள்ளது. பார்சல் மற்றும் விரைவு அஞ்சல் விநியோகங்களுக்கு தற்காலிகமாக 8 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அமெரிக்க அஞ்சல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் அருகாமையில் உள்ள ஆசிய நாடுகள் முதலில் பாதித்த நிலையில், போருக்கு முன்பு எண்ணெய் ஏற்றப்பட்ட கடைசி கப்பல்கள் ஐரோப்பிய துறைமுகங்களுக்கு வருவதால், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஐரோப்பா நேரடி பற்றாக்குறையைச் சந்திக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

Tags : Iran ,United States ,Washington ,
× RELATED பாகிஸ்தானில் தொடர் மழைக்கு 45 பேர் பலி