அருப்புக்கோட்டை, ஏப்.5: அருப்புக்கோட்டை தொகுதியில் இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேதுபதி உள்ளிட்ட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேதுபதி, புதிய மக்கள் தமிழ் தேசியம் கட்சி சார்பில் கணேசன், எழுச்சித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் இளங்கோ மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்துவிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியதில் இருந்து தற்போது வரை 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
