×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தா.பழூர், ஏப்.5: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை விக்கிரமங்கலத்தில் இருந்து வி.கைகாட்டி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருக்கோணம் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர்.

அதில், சுண்டக்குடி மருதையாற்று படுகை பகுதிகளில் இருந்து செட்டி திருக்கோணம் பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது. பின்னர், டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த செட்டி திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Tha.Pazhur ,Vikramangalam ,Police Inspector ,Karunakaran ,Ariyalur district ,V.Kaikatti ,Thirukonam ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு