×

முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் தேர்வு

அரியலூர், ஏப்.2: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு 149 அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் (Micro Observer 1st Randomization) தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சித்ரா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் (தேர்தல்) கண்ணன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் இருந்தனர்.

 

 

Tags : Ariyalur ,Election Commission of India ,Jayangkondam Assembly ,Tamil Nadu General Election-2026 ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு