×

எருக்கூர் பள்ளி ஆண்டு விழா

கொள்ளிடம், ஏப். 2: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி மனோகர், ஆசிரியர்கள் மீனாட்சி, சாந்தி, உமா, ரம்யா, அபிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர்.

 

Tags : Erukkur School Annual Day ,Kollidam ,Erukkur Panchayat ,Union Middle School ,Mayiladuthurai district ,District ,Education Officer ,Vimalraj ,Headmistress ,Manjula ,Parents Teachers Association… ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு