×

டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்

விருதுநகர், ஏப்.2: விருதுநகரில் டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் அடைந்தனர். மதுரையை சேர்ந்த சிலர், திருநெல்வேலியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று காலை ஒரு வேனில் சென்றனர். வேனை சிவகங்கை மாவட்டம், பசியாபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் மின்மினி (27) ஓட்டினார். விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சென்றபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 18 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Virudhunagar, Ap. 2:18 ,Virudhunagar ,Madura ,Sami ,Tirunelveli ,Venai ,Sivaganga District, Pashiapuram ,
× RELATED மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரசாரம்