×

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

விருதுநகர், ஏப்.2: விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், அருப்புக்கோட்டை ஒன்றியப் பகுதியின் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய அலுவலர் குழுவினர் அருப்புக்கோட்டை அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சீனி என்பவருக்குச் சொந்தமான கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர்.

அதேபோன்று, சாத்தூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான் மற்றும் காவல் துறையினர் அடங்கிய அலுவலர் குழுவினர், சாத்தூர் ஒன்றியம் கே.சத்திரப்பட்டி கிராமத்தில் கூட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பாபுராஜ் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Tags : Virudhunagar ,Virudhunagar District ,Food Safety Designated Officer ,Mariappan ,Aruppukottai ,Union Area ,Food Safety Officer ,Dharmar ,Chitambarapuram ,Aruppukottai… ,
× RELATED மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரசாரம்