×

முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர்கார்டன் பட்டமளிப்பு விழா

சிவகாசி, ஏப்.2: திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர்கார்டன் பட்டமளிப்பு விழா பள்ளியின் தாளாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் பொருளாளர் ராம்குமார் மற்றும் உறுப்பினர் பவித்ரபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக எஸ்ஆர்வி கல்வி நிறுவனங்களின் தலைவரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் டாக்டர் செல்வரதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக பால்பாண்டித்தாய் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். விழாவில் மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

 

Tags : Muthumari Matriculation Higher Secondary School ,Sivakasi ,Thirutangal ,Ganesan ,Ramkumar ,Pavithrapriya ,Saravanakumar ,
× RELATED மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரசாரம்