- பங்கூனி உத்தர விழா
- பெருமாள் கோயில்
- பெரியகுளம்
- ஸ்ரீ
- லக்ஷ்மி நாராயணா
- லட்சுமிபுரம்
- திருக்கல்யண வைபோகம்
- ஸ்ரீ லட்சுமி நாராய
- பெருமாள் சுவாமி
- பங்கூனி உத்தர
- ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமால்...
தேனி, ஏப். 2: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ லட்சுமி நாராயணன் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ லட்சுமி நாராயணா பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை முன்னிட்டு லட்சுமிபுரம் பொதுமக்கள் திருமண சீர்வரிசைகளை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்றது. இதில், லட்சுமிபுரம், ஜல்லிப்பட்டி, கைலாசபட்டி, சருத்துபட்டி, பெரியகுளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
