- திண்டுக்கல்
- கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாடு
- பறக்கும் படைகள்
- திண்டுக்கல் மாவட்டத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு
- திண்டுக்கல் கலெக்டர்
- அலுவலகம்
- சமாஜ்வாடி
- பிரதீப்
திண்டுக்கல், ஏப். 2: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருக்கான ஆய்வு கூட்டம் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பிரதீப் முன்னிலை வகித்தார். கலெக்டர் சரவணன் தலைமை வகித்து தெரிவித்ததாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். C-Vigil மற்றும் 1950 என்ற எண்ணில் வரப்பெறும் புகார்கள் குறித்து தேர்தல் கட்டுப்பட்டு அறையிலிருந்து வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்பதால் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
