×

தேர்தல் பணிக்கு மாஜி படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஏப். 2: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:சட்டமன்ற பொது தேர்தலுக்கு சிறப்பு காவலர்களாக முன்னாள் படை வீரர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த விருப்பம் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள், தங்களுடைய விருப்ப விண்ணப்பத்துடன் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் நகல்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Maji Corps ,Dindigul ,Dindigul district ,Collector ,Saravanan ,Assembly general ,
× RELATED மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரசாரம்