×

ஆதவ் மனைவி 5 மாநிலங்களில் லாட்டரி விற்பனை: சொத்து ரூ.245 கோடி; வேட்புமனுவில் பரபரப்பு தகவல்

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா, தனக்கு ரூ.197 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது மனைவி டெய்சியின் சொத்து மதிப்பு ரூ.245 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடவுள்ள ஆதவ் அர்ஜூனா நேற்று முன்தினம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில், தானும் தனது மனைவி டெய்சியும் வணிகம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவிக்கு சொத்துக்களில் இருந்தும் வருமானம் வருவதாகக் கூறியுள்ளார்.

* ஆதவ் அர்ஜூனா தனது வருமான வரிக்கணக்கில் 2020-21ல் ரூ.5.89 கோடி, 2021-22ல் ரூ.66.73 லட்சம், 2022-23ல் ரூ.20.17 கோடி, 2023-24ல் ரூ.29.73, 2024-25ல் ரூ.11.10 கோடி வரி செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
* மனைவி டெய்சியின் வருமான வரிக் கணக்கில் 2020-21ல் ரூ.1.52 கோடி, 2021-22ல் ரூ.3.67 கோடி, 2022-23ல் ரூ.5.38 கோடி, 2023-24ல் ரூ.21.24 கோடி, 2024-25ல் ரூ.6.85 கோடி செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
* ஆதவ் அர்ஜூனா தனது கையில் ரொக்கமாக ரூ.1.69 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
* ஆதவ் அர்ஜூனாவிடம் ரூ.9.95 லட்சம் மதிப்புள்ள இனோவா, ரூ.10.55 லட்சம் மதிப்புள்ள மாருதி என 2 கார்கள் உள்ளதாகவும் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்ட் பைக், ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
* வரப்பெறவேண்டிய தொகை, வட்டித்தொகை போன்ற ஏனைய சொத்துக்கள் என்ற வகையில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொகை ரூ.17 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது.
* ஆதவ் அர்ஜூனாவின் பெயரில் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தத் தொகை ரூ.17.53 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

* தேர்தலுக்காகத் தொடங்கப்பட்ட இந்திய ஓவர்சீஸ் சிஐடி நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.51 ஆயிரம், ஆக்சிஸ் வங்கி எல்டாம்ஸ் சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1.95 கோடி, ஈக்விடாஸ் வங்கி பாரிமுனை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.37.83 கோடி, எச்எஸ்பிசி வங்கி சென்னை மெரினா கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.18.37 கோடி, கரூர் வைஸ்யா வங்கி ஒய்ட்ஸ் சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.3.50 லட்சம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஆழ்வார்பேட்டை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.6.23 லட்சம், பஞ்சாப் நேட்னல் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.10.73 லட்சம், எச்டிஎப்சி அண்ணா சாலை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1.60 லட்சம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எச்டிஎப்சி அண்ணா சாலை கிளையில் பிக்சட் டெபாசிட் ரூ.10 கோடி உள்ளது.

* ஆதவ் அர்ஜூனா நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்டவற்றில் செய்துள்ள முதலீடுகளின் மொத்தத் தொகை ரூ.2.23 கோடி.
* அரைஸ் கன்ஸ்ட்ரக்டன்ஸ் பி லிட் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம், வாய்ஸ் ஆப் காமன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம், வாய்ஸ் ஆப் காமன் வியூகவகுப்பு நிறுவனத்தில் ரூ.9.99 லட்சம், அத்தலெடிக் கேம் ஸ்டேடர்ஜி அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.99 ஆயிரம், அரைஸ் இன்வெஸ்மென்ட் அண்ட் கன்சல்டன்ஸ் நிறுவனத்தில் ரூ.2.09 கோடி, வாய்ஸ் ஆப் காமன் அறக்கட்டையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
* ஆதவ் அர்ஜூனா பெயரில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களின் மொத்த மதிப்பு: ரூ.17.49 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது
* உத்தண்டியில் 42995.6 சதுர அடி நிலத்தில் 13635.7 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.12.50 கோடி.
* போட் கிளப்பில் உள்ள 1094.5 சதுர அடி நிலத்தில் 2352 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தின் வாங்கியபோதிருந்த (வாங்கிய ஆண்டு 2021) மதிப்பு ரூ.4.50 கோடி, அந்தக் கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.4.99 கோடி.

* ஆதவின் பிரமாண பத்திரத்தில், 2021ம் ஆண்டு ரூ.1.38 கோடி, 20223ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலுத்த வேண்டிய வருமான வரி தொடர்பான மேல்முறையீடு வருமான வரி ஆணையரிடம் விசாரணை நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* சிபிஐ வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரூர் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை. மேலும், மரணம் விளைவிக்க முயற்சித்தல், தனிநபர் உயிருக்கோ சொத்துக்கோ ஆபத்து விளைவிக்கும் செயல், அரசுப் பணியாளரைத் தடுத்தல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்டவற்றின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
* டெய்சியிடம் ரொக்கம் ரூ.12.22 கோடி , ரூ.7.50 லட்சம் மதிப்பு டிராக்டர் இருப்பதாககூறியுள்ளார்.
* டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொகை ரூ.2.60 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.
* டெய்சி பெயரில் வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் ரூ.12.49 கோடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* டெய்சி நிறுவனங்களின் பங்குகள், எல்எல்பி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் 41 நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளின் மொத்தத் தொகை: ரூ.68.75 கோடி
* இதில் பார்தி ஏர்டெலின் 125 பங்குகளில் ரூ.88 ஆயிரம், எச்.டி.எப்.சி வங்கியின் 123 பங்குகளில் ரூ.1.96 லட்சம், ரிபாட்ரியேட்ஸ் கோ-ஆப்பரேட்டிவ் பைனான்ஸ் மற்றும் டெவலப்மென்ட் பேங்க் லிட் 4000 பங்குகளில் ரூ.1 லட்சம், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிட் 1430 பங்குகளில் ரூ.1.56 லட்சம், ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கியில் 116250 பங்குகளில் ரூ.1.05 கோடி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் 2860 பங்குகளில் ரூ.31.93 லட்சம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 69 பங்குகளில் ரூ.2.19 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

எல்எல்பியில் செய்துள்ள முதலீடுகள்: குரூவி இன்ப்ராகாம் எல்எல்பி ரூ.29.94 லட்சம், மேக்னடிக் ரியல்கான் எல்எல்பி ரூ.4.99 லட்சம், சாகேதநாத் அண்ட் கோ ரூ.1.75 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மியூச்சுவல்பண்ட் மூலம் எஸ்.பி.ஐ ஆர்பிட்ரேஜ் ஆப்பர்சூனிட்டீஸ் பண்ட் ரூ.3.22 கோடி, எஸ்.பி.ஐ சேவிங்ஸ் பண்ட் – குரோத் ரூ.33.57 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேபிடல் லிட் ரூ.27.92 கோடி, மார்ட்டின் ஸ்பின்னிங் மில்ஸ் அண்ட் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம், வின்-பினிட்டி கேமிங் பி லிட்டில் ரூ.10.90 லட்சம், பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பி லிட்டில் ரூ.3.74 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

* மேக்ஸ் லைப் பிளேட்டினம் வெல்த் ப்ளேனில் ரூ.40 லட்சம், மேக்ஸ் லைப் மாதாந்திரத் திட்டத்தில் ரூ.81.90 லட்சம், பிபிஎப்ல் ரூ.38.53 லட்சம் முதலீடு என மொத்தம் ரூ.1.60 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
* கொடுத்த கடன் முன் பணம் அல்லது கடன், திரும்பப் பெறக்கூடிய தொகைகள்: 69.41 கோடி. இதில், அரைஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம், அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேபிடல் நிறுவனத்திற்கு ரூ.50 கோடி, பெஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் பி லிட் நிறுவனத்திற்கு ரூ.2.96 கோடி, டெய்சி டிசைன்ஸ் பி லிட் நிறுவனத்திற்கு ரூ.89.91 கோடி, டெய்சி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.10.42 கோடி, மேக்னடிக் ரியல்கான் எல்.எல்.பி நிறுவனத்திற்கு ரூ.33.34 லட்சம், வின் – பினிட்டி கேமிங் பி லிட் நிறுவனத்திற்கு ரூ.1.70 லட்சம், சோலோகார்டு மெடிக்கல் டிவைசஸ் பி லிட் நிறுவனத்திற்கு ரூ.50.96 லட்சம், எஸ்.எம் ஏஜென்சி நிறுவனத்திற்கு ரூ.38 லட்சம், மால்கோ டிரேடிங் நிறுவனத்திற்கு ரூ.1.02 கோடி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ.91.31 லட்சம், மார்ஷல் கேஸ்பர்க்கு ரூ.1.12 கோடி, நட்சத்திரம் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு ரூ.50 லட்சம், சம்பள அட்வான்ஸ் என்ற முறையில் ரூ.6.93 லட்சம் வழங்கியுள்ளார்.

* டெய்சி பெயரில் உள்ள வேளாண் நிலங்களின் மதிப்பு ரூ.37.45 கோடி.
* மாமல்லபுரத்தில் உள்ள 17.23 ஏக்கர் பூர்வீக நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.18 கோடி.
* கேரளம் மாநிலம் மூலதாரா கிராமத்தில் 5.92 ஏக்கர் நிலத்தின் (வாங்கிய ஆண்டு 2010) அப்போதைய மதிப்பு ரூ.39.20 லட்சம். நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.30 லட்சம்.
* கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியில் உள்ள 6.86 ஏக்கர் பூர்வீக நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.1.43 கோடி.
* செங்கல்பட்டு மாவட்டம் குழிபந்தண்டலத்தில் 12.43 ஏக்கர் நிலத்தின் (வாங்கிய ஆண்டு 2021) அப்போதைய மதிப்பு ரூ.12.92 கோடி. நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.16.19 கோடி.
* செங்கல்பட்டு மாவட்டம் குழிபந்தண்டலத்தில் 2.42 ஏக்கர் நிலத்தின் (வாங்கிய ஆண்டு 2022) அப்போதைய மதிப்பு ரூ.16.25 லட்சம். நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.20.37 லட்சம்.
* செங்கல்பட்டு மாவட்டம் குழிபந்தண்டலத்தில் 4.43 ஏக்கர் நிலத்தின் (வாங்கிய ஆண்டு 2022) அப்போதைய மதிப்பு ரூ.70.30 லட்சம். நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.88.10 லட்சம்.
* கோவை மாவட்டம் வெள்ளகிணறில் 1.79 ஏக்கர் பூர்வீக நிலத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.34.87 லட்சம்.
டெய்சியின் பெயரில் உள்ள வணிக் கட்டிடங்களின் மதிப்பு ரூ.33.28 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:
* கோவை டாடாபாத் பகுதியில் குடும்பப் பகிர்வு மூலம் வந்த பூர்வீகச் சொத்தான 7197 சதுர அடி நிலத்தில் 5017 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.1.47 கோடி.
கோவை காந்திபுரம் பகுதியில் குடும்பப் பகிர்வு மூலம் வந்த பூர்வீகச் சொத்தான 8481.75 சதுர அடி நிலத்தில் 42220 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.4.23 கோடி.
* கோவை மாவட்டம் ஆர்எஸ் புரத்தில் 4089.31 சதுர அடி நிலத்தில் 1275 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.2.76 கோடி.
* தேனாம்பேட்டையில் குடும்பப் பகிர்வு மூலம் வந்த பூர்வீகச் சொத்தான 3315 சதுர அடி நிலத்தில் 3315 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.1.28 கோடி.
* சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் (வாங்கிய ஆண்டு 2020) 3665 சதுர அடி நிலத்தில் 6600 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தை வாங்கியபோதிருந்த மதிப்பு ரூ.21 கோடி, அந்தக் கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.23.51 கோடி.
* உத்தண்டியில் 42995.6 சதுர அடி நிலத்தில் 13635.7 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தின் வாங்கியபோதிருந்த (வாங்கிய ஆண்டு 2021) மதிப்பு ரூ.5.43 கோடி, அந்தக் கட்டடத்தின் தற்போதைய தோராய சந்தை மதிப்பு ரூ.12.50 கோடி. இதில் ஆதவுக்கும் பங்கு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டெய்சி மொத்தம் ரூ.26.27 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில் சகித்நாத் அண்ட் கோ நிறுவனத்திடம் ரூ.79.37 லட்சம், டெய்சி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்நிறுவனத்திடம் ரூ.12.27 கோடி, தனது தந்தை மார்டினிடம் ரூ.13.20 கோடி கடன்கள் வாங்கியுள்ளார் என பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தங்கைக்கு ரூ.46 கோடி உட்பட 156 கோடி கடன் கொடுத்த ஆதவ்
ஆதவ் அர்ஜூனா தனது தங்கைக்கு ரூ.46 கோடியும், நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.25 லட்சமும் கடனாக வழங்கியுள்ளார். அரைஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கு ரூ.2.92 லட்சம், அரைஸ் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கு ரூ.4.55 லட்சம், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்க்கு ரூ.15.83 லட்சம், வாய்ஸ் ஆப் காமன்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்க்கு ரூ.66.47 கோடி, அத்லெடிக் கேம் ஸ்ட்ரேட்டஜி அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட்க்கு ரூ.38.09 கோடி, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் டெமாக்ரசி எல்எல்பிக்கு ரூ.1 லட்சம், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் பவுண்டேஷனுக்கு ரூ.73.50 லட்சம், சீதாலட்சுமிக்கு ரூ.46.10 கோடி, குல்விந்தர் சிங் கில்லுக்கு ரூ.35 லட்சம், செங்கல்ராய நாயுடுக்கு ரூ.20 லட்சம், புனிதா ஜி சிங்கிற்கு ரூ.1.37 கோடி, சிம்ரன் பார்கவாவுக்கு ரூ.1.37 கோடி, பாஸ்கரனுக்கு ரூ.10 லட்சம், நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.25 லட்சம், எஸ்.எஸ் டூர்ஸ் அண்ட் டிராவல் நிறுவனத்திற்கு ரூ.58 லட்சம் வழங்கியுள்ளதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

* லாட்டரி விநியோகம் செய்ய 5 அரசுகளுடன் ஒப்பந்தம்
பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 4.52% பங்குகளை டெய்சி வைத்துள்ளார். அந்த நிறுவனம் 5 மாநில அரசுகளுடன் லாட்டரி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் வருமாறு:
* 2020ம் ஆண்டு கோவா அரசுடன் லாட்டரி டிஸ்ட்ரிபியூஷன் ஒப்பந்தம்.
* 2023ம் ஆண்டு நாகாலாந்து அரசுடன் லாட்டரி டிஸ்ட்ரிபியூஷன் ஒப்பந்தம்.
* 2021ம் ஆண்டு பஞ்சாப் அரசுடன் லாட்டரி டிஸ்ட்ரிபியூஷன் ஒப்பந்தம்.
* 2021ம் ஆண்டு சிக்கிம் அரசுடன் லாட்டரி டிஸ்ட்ரிபியூஷன் ஒப்பந்தம்.
* 2020ம் ஆண்டு அருணாச்சல் பிரதேச அரசுடன் லாட்டரி டிஸ்ட்ரிபியூஷன் ஒப்பந்தம் செய்துள்ளார் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ரூ.8.45 கோடிக்கு தங்கம், வைரம்
ஆதவின் பிரமாண பத்திரத்தில் அவரிடமும் அவரது மனைவியிடமும் உள்ள தங்கம், வைர நகைகள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி ஆதவ் அர்ஜூனா தன்னிடம் ரூ.2.29 கோடி மதிப்புள்ள 1691 கிராம் தங்கம் உள்ளதாகக் கூறியுள்ளார். ஆதவின் மனைவி டெய்சியிடம் ரூ.3.01 கோடி மதிப்புள்ள 2225.62 கிராம் தங்கமும், ரூ.60.27 லட்சம் மதிப்புள்ள 24109 கிராம் வெள்ளியும், ரூ.6.16 கோடி மதிப்புள்ள வைர ஆபரணங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Adhav ,Chennai ,Adhav Arjuna ,Villivakkam ,Tamil Nadu Vetri Kalagam ,Daisy ,
× RELATED நான் ஒரு மலையாளி கேரளாவில் ராகுல் பெருமை