×

முருகன் கோயிலில் தரிசனம் செய்து திருத்தணியில் பிரசாரத்தை தொடங்கினார் பிரேமலதா

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று மாலை திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அரக்கோணம் சாலையில் இருந்து சித்தூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசியதாவது: தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற லட்சியத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ள ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கு கூப்பன் பெற்று அவர் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள பெண்கள் அனைவரும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். திருத்தணியை பொருத்தவரை முருகன் கோயிலில் செவ்வாய்கிழமைதோறும் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி பெற்று தரப்படும். திருத்தணி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கவும், ஜவுலி பூங்கா, கிராமப்புறங்களில் பகுதிநேர நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி உள்பட திமுக கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Premalatha ,Thirutani ,Murugan temple ,Chennai ,DMDK ,DMK ,Arakkonam Road ,Chittoor Road ,
× RELATED நான் ஒரு மலையாளி கேரளாவில் ராகுல் பெருமை