×

பஞ்சாப்-குஜராத் இன்று மோதல்; கடந்த சீசனைவிட இம்முறை வலுவாக உள்ளோம்: பஞ்சாப் கோச் பாண்டிங் நம்பிக்கை

நியூசண்டிகர்: 9வது ஐபிஎல் தொடரில் நியூ சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. கில் தலைமையிலான குஜராத் அணியில் சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், டாம் பேண்டன், ஷாருக் கான், கிளென் பிலிப்ஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அந்த அணி தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. ஆல்ரவுண்டர்களாக ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். பவுலிங்கில் ரபாடா, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். எனவே தாங்கள் சந்திக்கும் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க கில் தலைமை ஆயத்தமாகி வருகிறது.

அதே சமயம் தான் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் சீசனிலேயே பஞ்சாப் அணியை பைனல் வரை அழைத்துச் சென்ற ஸ்‌ரேயாஸ் ஐயர் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் பிரியன்ஷ் ஆர்யா, கூப்பர் கனோலி, மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டாயினிஸ், வதேரா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். ஆல்ரவுண்டர் வரிசையில் மார்கோ ஜேன்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய் இந்த முறையும் தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் விஜய்குமார் வைசாக், பெர்கூசன், சாகல், பர்லெட் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்தக் கூடும்.

இந்த நிலையில் கடந்த சீசனை விட இம்முறை தாங்க வலுவாக உள்ளதாக பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த முறை பைனலில் வெறும் 6 ரன்னில் கோப்பையை தவறவிட்டது ஏமாற்றத்தை தந்தது. ஆனால் கடந்த சீசன் முழுவதுமே எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. கடந்த சீசனை விட இம்முறை வலுவாக உள்ளோம். கூப்பர் கனோலி, ஓமர்சாய், ஜேன்சன் இருப்பது எங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கூடுதல் பலம்.’’ என்றார். ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அசுர பார்மில் உள்ள கில் அணியும், கடந்த சீசனில் பஞ்சாப் அணியை பைனல் வரை அழைத்துச் சென்ற ஸ்‌ரேயாஸ் ஐயர் அணியும் மோதும் ஆட்டம் என்பதால் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Tags : Punjab ,Gujarat ,Ponting ,New Chandigarh ,9th ,IPL series ,Gill ,Sai Sudarshan ,Jos Buttler ,Tom Bandon ,Shahrukh Khan ,Glenn… ,
× RELATED 127 ரன்னி்ல் சுருண்ட சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி