சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் , குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
